NATIONAL

வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்

23 ஏப்ரல் 2024, 3:46 AM
வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்

புத்ராஜெயா, ஏப் 23 - வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் சீனாவுக்கு நாளை தொடங்கி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரு தரப்பு, வட்டார, அனைத்துலக மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விவகாரங்களை இரு தலைவர்களும் விவாதிப்பர் என்று  வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான மேம்பாடுகளை மதிப்பிடுவதற்கான புதிய ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை ஆராய்வதற்கும் இந்த சந்திப்பு பெரிதும் துணை புரியும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்  உறவு ஏற்பட்டு 50 ஆம் ஆண்டுகள் ஆகிவிட்டன, கடந்த 2013ஆம் ஆண்டில் இரு நாடுகளும் வியூக பங்காளிகளாக ஆகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் வெளியுறவு அமைச்சரின் இந்த  பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.

இந்த பயணத்தின் போது சீன கம்யூனிஸ்டு கட்சியின் (சி.சி.பி.) அனைத்துலக துறை அமைச்சர் லியு ஜியான்சோ மற்றும் இதர சி.சி.பி. தலைவர்களுடனும் முகமது ஹசான் சந்திப்பு நடத்துவார்.

மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீன கடந்த 15 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. இவ்விரு நாடுகளும் இடையிலான மொத்த வர்த்த மதிப்பு 45,084 கோடி வெள்ளியாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.