NATIONAL

பெண் ஆசிரியரை தாக்கிய ஆண் ஆசிரியருக்குக் காவல்துறையினர் வலைவீச்சு

22 ஏப்ரல் 2024, 5:21 AM
பெண் ஆசிரியரை தாக்கிய ஆண் ஆசிரியருக்குக் காவல்துறையினர் வலைவீச்சு

சுக்கை, ஏப்.21: கெமமானில் உள்ள தொடக்கப் பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய புகாரை விசாரிக்க ஆண் ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 32 வயதான ஆங்கில ஆசிரியர் காலை 6.55 மணி அளவில் பள்ளி சிற்றுண்டி சாலையில் சந்தேக நபரால் தாக்கப்பட்டதாக கெமமான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர் காலை 8.20 மணியளவில் ஆயர் புத்தே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

"இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. தற்போது 49 வயதுடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்," என்று அவரைத் தொடர்பு கொண்ட போது கூறினார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 323/506 இன் கீழ் காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவியல் அச்சுறுத்தல் களுக்காகவும் வழக்கு மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாக ஹன்யன் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.