NATIONAL

நெல் மற்றும் அரிசி பதுக்கல், கடத்தலில் ஈடுபடும் எவரையும்  பாதுகாக்க முடியாது

16 ஏப்ரல் 2024, 4:13 AM
நெல் மற்றும் அரிசி பதுக்கல், கடத்தலில் ஈடுபடும் எவரையும்  பாதுகாக்க முடியாது

கோலாலம்பூர், ஏப் 16: இந்த நாட்டில் விரைவான லாபத்திற்கு நெல் மற்றும் அரிசி  பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்க முடியாது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் (கேபிகேஎம்) வலியுறுத்துகிறது.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் சில தரப்பினர் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் இந்த விஷயத்தை விளக்கினார்.

நெல் மற்றும் அரிசி சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் இருந்தால், மலேசிய போட்டி ஆணையத்திற்கு (MyCC) அதன் தொடர்பான தகவல்களை அனுப்ப கேபிகேஎம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அவர்களின் எந்த ஒரு விசாரணையிலும் தலையிட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

"மலேசிய போட்டி ஆணையத்தின் நோக்கங்களில் ஒன்று, நமது நாட்டின் பொருளாதாரத்தில் கார்டெல்கள் இருப்பதை ஆராய்வது ஆகும்.

"இதற்கு முன்பு இந்த கேள்விக்கு நான் பலமுறை பதிலளித்துள்ளேன், ஆனால், அவர்கள் அதை கவனிக்கவில்லை. இந்த விளக்கம் அனைவருக்கும் தெளிவு படுத்தட்டும்," என்று முகமட் சாபு கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.