ஈப்போ, ஏப் 16: நேற்று பிந்தாங் ஹிஜாவ் சுங்கை ருய், கெரிக் நிறுத்தும் இடத்தில் சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஆடவர் ஒருவருக்கு முதுகெழும்பில் காயம் ஏற்பட்டது.
முகமட் குஸ்யாயிரி மாட் ஜசான் (38) சாலையோரத்தில் குழாய் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பள்ளத்தாக்கில் விழுந்தார் என பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று மதியம் கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு 1.12 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், சுமார் 25 நிமிடங்களுக்குள் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகவும் அவர் கூறினார்.
"தீயணைப்பு வீரர்கள் ஸ்ட்ரெச்சர் உபகரணங்கள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட வரை சாலையின் ஓரத்தில் கொண்டு வந்தனர்.
"பாதிக்கப்பட்டவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் மேல் நடவடிக்கைக்காகச் சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்," என்று அவர் கூறினார். மீட்பு நடவடிக்கை பிற்பகல் 1.50 மணிக்கு முடிந்தது.
– பெர்னாமா


