NATIONAL

விபத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் தப்பியது

15 ஏப்ரல் 2024, 2:35 AM
விபத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் தப்பியது

உலு சிலாங்கூர், ஏப் 15: நேற்று ஜாலான் கோலா குபு பாருவில் 30 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் ஒன்று விழுந்ததில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் தப்பியது.

இந்த விபத்தில் 35 மற்றும் 32 வயதுடைய கணவன் மனைவியும், 6, 8 மற்றும் 14 வயதுடைய மூன்று மகள்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோட்டான் சத்ரியா கார் விபத்துக்குள்ளானதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிஎம்) சிலாங்கூர் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 9.41 மணிக்குத் தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) ஆறு பேர் கொண்ட குழு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.