NATIONAL

5,275 அடிப்படை உணவு கூடைகள் விநியோகம்

15 ஏப்ரல் 2024, 2:16 AM
5,275 அடிப்படை உணவு கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 15: நம்பிக்கை உணவு கூடைகள் திட்டத்திற்குத் தொடர்ந்து பங்களிக்குமாறு பொதுமக்களை பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் அழைக்கிறது.

மேலும், 2020இல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 5,275 அடிப்படை உணவு  கூடைகள் குறைந்த திறன் கொண்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

"நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நன்கொடையும் தேவைப் படுபவர்களுக்குப் பெறும் உதவியாக இருக்கும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்குப் பங்களிக்க விரும்புவோர் https://www.airselangor.com/boxofhope/ என்ற இணைப்பை நாடலாம்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள B40 சமூகத்தினருக்கு அடிப்படை உணவுத் தேவைகளை விநியோகிப்பதற்காக நம்பிக்கை உணவு கூடைகள்  திட்டம் தொடங்கப்பட்டது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டமான செசாமா மாராவின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.