ECONOMY

ஐந்து செகி ஃப்ரெஷ் கிளைகளில் வரும் ஞாயிறன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

12 ஏப்ரல் 2024, 1:43 AM
ஐந்து செகி ஃப்ரெஷ் கிளைகளில் வரும் ஞாயிறன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப் 12- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான  மலிவு விற்பனை ஐந்து செகி ஃப்ரெஷ் கிளைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கோழி, மீன், அரிசி, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனை  பத்து கேவ்ஸ், பண்டார் சவுஜானா புத்ரா, ஜெராம், ஸ்ரீ கோம்பாக் மற்றும் அவாணி பாங்கி ஆகிய செகி ஃப்ரெஷ் கிளைகளில்  நடைபெறும்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை  பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்குகிறது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை  எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்தாண்டு ஜூலை மாதம் செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப் படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.