NATIONAL

ஜெரிக்-ஜெலியில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்

9 ஏப்ரல் 2024, 4:06 AM
ஜெரிக்-ஜெலியில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஈப்போ, ஏப் 9: நேற்று கெரிக் அருகே உள்ள ஜாலான் ராயா திமோர்-பாரட் (ஜேஆர்டிபி) ஜெரிக்-ஜெலி, கிலோமீட்டர் 51.3 இல் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.

பலநோக்கு வாகனம் (எம்பிவி) வகை டொயோட்டா இன்னோவா ஓட்டுனரான 54 வயதுடைய அந்நபர், தைப்பிங் மருத்துவமனையில் இரவு 11.20 மணியளவில் உயிரிழந்ததாகக் கெரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று நண்பகல் 12.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கணவனும் மனைவியும் பயணித்த புரோட்டான் பெர்சோனா கார் கட்டுப்பாட்டை இழந்து எம்பிவி வாகனத்துடன் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கமிசான் காசிமோன் (42) மற்றும் அவரது மனைவி நூர் அஸ்மா மட் சைனல் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்தம்பதியரின் மகன் (10 வயது) மற்றும் மகள் (3 வயது) ஆகியோர் உடலில் காயங்களுக்குள்ளாகினர். மேலும், டொயோட்டா இன்னோவாவில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.