ஷா ஆலம், ஏப் 9: காலை 9 மணி நிலவரப்படி சிலாங்கூரில் இரண்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவுகள் பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு (Apims) தெரிவித்துள்ளது.
பந்திங்கில் (163) மற்றும் கிள்ளானில் (139)ஆக பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் 48 பகுதிகள் மிதமான IPU அளவுகளைப் (51-100) பதிவு செய்துள்ள நிலையில் 18 பகுதிகள் 50க்கும் குறைவான IPU அளவீடுகளைக் கொண்டுள்ளன.
பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.
நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் காற்று மாசுக் குறியீடு பற்றிய தரவு வெளியிடப்படுகிறது.


