NATIONAL

நேற்று இரவு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்தது

9 ஏப்ரல் 2024, 1:38 AM
நேற்று இரவு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்தது

கோலாலம்பூர், ஏப் 9: நேற்று இரவு 9 மணி நிலவரப்படி சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்தது, கடுமையான நெரிசல் எதுவும் இல்லை.

ஜாலான் டூத்தா டோல் பிளாசா (வடக்கு) மற்றும் சுங்கை பீசி டோல் பிளாசா (தெற்கே) ஆகியவற்றில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கோம்பாக் டோல் பிளாசாவில் (கிழக்கு கடற்கரை திசை) வாகனங்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு இருந்ததாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (எல்எல்எம்) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"இதுவரை, நாட்டின் தெற்குப் பகுதியில் தங்காக், ஜோகூரிலிருந்து ஜாசின், மலாக்காவை நோக்கி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தவிர அனைத்து நெடுஞ்சாலைகளும் சீராக நகர்கின்றன," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணத்தைத் தொடர்ந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதால், கிழக்குக்கரை மாநிலங்களை நோக்கிய காரக் டோல் பிளாசாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது என்றார்.

நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. அவை கிலோமீட்டர் (கிமீ) 172.9 வடக்கே தங்காக்கிலிருந்து ஜாசின் வரை மற்றும் கிலோமீட்டர் 265.7 தெற்கே கோலா கங்சார் முதல் ஈப்போ (U) வரை ஆகும்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.