NATIONAL

தாய்லாந்து காதலியை படுகொலை செய்த இந்திய நபருக்கு  எதிராக  கொலை குற்றச்சாட்டு

8 ஏப்ரல் 2024, 8:24 AM
தாய்லாந்து காதலியை படுகொலை செய்த இந்திய நபருக்கு  எதிராக  கொலை குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 8 - கடந்த பிப்ரவரி மாதம் செத்தியா ஆலமில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23 வது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியைத் தள்ளி  கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநரின் புதிய வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்த  ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.

இந்த வழக்கு அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அசார் ரசாலி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வி.நாதனின் (வயது 37) வழக்கறிஞர்  சிவானந்தன் ராகவன் கூறினார்.

இந்த வழக்கை ஜூன் 7 ஆம் தேதி நடத்த நீதிமன்றம் முன்பு   தேதி குறிப்பிடப்பட்டிருந்தது, எனினும், வழக்கில் புதிய திருப்பங்கள் காரணமாக ஒரு புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 28ஆம்  தேதி இரவு 10.02 மணிக்கு ஜாலான் செத்தியா டாகாங் ஏ.எச். யு13/ஏ.எச். செத்தியா ஆலமில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்  32 வயதான மாவிகா லும்மை என்றப் பெண்ணை கொலை செய்ததாக நாதன்  குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கவும் மரண தண்டனை வழங்காத பட்சத்தில் 40 ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் 12 பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின்  302 பிரிவின் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.