NATIONAL

காற்று  குறியீடு மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற அளவீடகவுள்ளது

8 ஏப்ரல் 2024, 8:02 AM
காற்று  குறியீடு மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற அளவீடகவுள்ளது

ஷா ஆலம், ஏப் 8: இன்று மதியம் 2 மணி நிலவரப்படி மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு அளவுகள் பதிவாகியுள்ளன. அதில் பந்திங், கோலா லங்காட் (157) அதிகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

நீலாய், நெகிரி செம்பிலான் (108) மற்றும் செரஸ், கோலாலம்பூர் (109) என காற்று மாசு குறியீடு பதிவு செய்துள்ளதாகச் சுற்றுச்சூழல் துறையால் இயக்கப்படும் மலேசியா காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின்  இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், 42 பகுதிகள் சராசரி அளவீடு (51-100) பதிவு செய்தன மற்றும் 23 பகுதிகள் 50க்கும் குறைவான அளவீடுகளைக் கொண்டுள்ளன.

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100

மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்

ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300

மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் காற்று மாசுக் குறியீடு பற்றிய தரவு வெளியிடப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.