NATIONAL

பன்றி இறைச்சித் துண்டுகளைக் கடத்திய குற்றத்திற்குத் தேவராஜூ, ரவீந்திரனுக்கு அபராதம்

8 ஏப்ரல் 2024, 7:24 AM
பன்றி இறைச்சித் துண்டுகளைக் கடத்திய குற்றத்திற்குத் தேவராஜூ, ரவீந்திரனுக்கு அபராதம்

செத்தியூ, ஏப் 8- கடந்தாண்டு நவம்பர் மாதம் 246,240 வெள்ளி மதிப்புள்ள

9,120 கிலோ எடை கொண்ட 228 பன்றி இறைச்சித் துண்டுகளை கடத்திய

குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு இங்குள்ள

மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 8,000 வெள்ளி அபராதம் விதித்தது.

தங்கள் மீதான குற்றச்சாட்டை எஸ்.தேவராஜ் நாயுடு (வயது 38) மற்றும்

பி.பி. ரவீந்திரன் (வயது 45) ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டதைத்

தொடர்ந்து மாஜிஸ்திரேட் அய்னிஸ் அபு ஹசான் இந்த தண்டனையை

வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் பத்து மாதச்

சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

எனினும், அவ்விருவரின் முதலாளியின் பிரநிதிநிதி அபராதத்

தொகையைச் செலுத்தினார்.

திரங்கானு மாநில கால்நடை சேவைத் துறையின் அனுமதியின்றி 228

பன்றி இறைச்சித் துண்டுகளை தாய்லாந்திலிருந்து கடத்தியதாக

அவ்விருவரும் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி விடியற்காலை 3.30 மணியளவில்

கம்போங் பாக் கிச்சில் சாலையோரம் அந்த பன்றி இறைச்சி ஏற்றப்பட்ட

குளிர்பதன கொள்கலன் லோரியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவ்விருவர் மீதும் 2009ஆம் ஆண்டு பிராணிகள் விதிமுறை 5(3)இன் கீழ்

குற்றஞ்சாட்டப்பட்டிருந்த து. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10,000

வெள்ளி வரை அபராதம் விதிக்க இச்சட்ட விதி வகை செய்கிறது.

திரங்கானு மாநில கால்நடை சேவைத் துறையின் அரசுத் தரப்பு அதிகாரி

முகமது ஷாஹிஹான் இந்த வழக்கை நடத்திய வேளையில்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.