NATIONAL

இலவச டோல் கட்டண சலுகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம்

8 ஏப்ரல் 2024, 4:10 AM
இலவச டோல் கட்டண சலுகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர், ஏப் 8: இன்று முதல் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டண சலுகையைச் சாலைப் பயனாளிகள் பயன்படுத்திக் கொள்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இன்று காலை 8 மணி நிலவரப்படி, வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"பந்தாய் தீமோர் 1 மற்றும் 2 நெடுஞ்சாலைகளில் இதுவரை போக்குவரத்து சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இருப்பினும், கேஎல்- காரக் நெடுஞ்சாலையில் (KLK) உள்ள கெந்திங் செம்பா சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பு போக்குவரத்து மெதுவாக நகர்கிறது," என பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பொதுமக்கள் கட்டணமில்லா ``PLUSLine`` 1-800-88-0000 மற்றும் X தளம் @plustrafik அல்லது LLM லைன் 1-800-88-7752 மற்றும் X தளம் @llmtrafik மூலம் சமீபத்திய போக்குவரத்து தகவலைப் பெறலாம்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.