ஷா ஆலம், ஏப் 5: உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் முதலீட்டை
ஊக்குவிப்பதற்காக மாதாந்திர நட்புறவு திட்ட கூட்டங்களை மாநில அரசு நடத்துகிறது.
சிலாங்கூர் முதலீடு நடத்தும் இந்நடவடிக்கை திட்ட ஒப்புதலுக்கான வசதியாக
செயல்படுகிறது. இதனால் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்படுகின்றன என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான்
தெரிவித்தார்.
முதலீடு, தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான இக்கூட்டம் மாநிலம் மற்றும்
கூட்டமைப்பு சம்பந்தப்பட்டது ஆகும். இதன் மூலம் ஒப்புதல், புதிய திட்ட
முன்மொழிவுகள், நிலம் தொடர்பான விஷயங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்
ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பகுதியின் வளர்ச்சி செயல்முறையையும் நாங்கள்
காண்கிறோம்.
இத்திட்டம் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மூலம்
எழுப்பப்பட்ட பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்து சுமூகமான செயல்பாடுகளுக்கு
உதவுகிறது மற்றும் முதலீட்டின் மதிப்பை அதிகரிக்கிறது, என்று அவர்
சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
இக்கூட்டம் சிறந்த முடிவுகளை அடைவதை உறுதி செய்வதற்காக, முதலில் தள
வருகை நடத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
“இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காணவிட்டால், சிலாங்கூர்
பொருளாதார நடவடிக்கை கூட்டத்தில் பரிசீலனை மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு
நீட்டிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.


