NATIONAL

மரம் விழுந்ததில் வாகனம் ஓட்டுனர் மரணம்

5 ஏப்ரல் 2024, 2:44 AM
மரம் விழுந்ததில் வாகனம் ஓட்டுனர் மரணம்

சிராம்பன், ஏப் 4: நேற்று பிற்பகல் 4 மணியளவில் ஜாலான் செனவாங் பரோய், தாமான்

ரஷிடா உத்தாமா என்ற இடத்தில் மரம் ஒன்று காரின் மேல் விழுந்ததில் வாகனம்

ஓட்டுனர் உயிரிழந்தார்.

சாலை வழியாகச் சென்ற பெரோடுவா விவா கார் மீது மரம் விழுந்த சம்பவம் குறித்து

பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன என செனாவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு

நிலையத் தலைவர் முகமட் நஸ்ரி அஜிஸ் கூறினார்.

.

நாங்கள் 48 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதைக்

கண்டறிந்தோம், மேலும் சுகாதார அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த

சம்பவத்தால் குறிப்பிட்ட காரும் நசுங்கிவிட்டது, என்று அவர் அறிக்கை ஒன்றில்

தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடைமைகள் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அப்பகுதியில் மரங்களை அகற்றும் மற்றும் வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று

வருகின்றன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.