NATIONAL

இந்தோனேசியா ஜனாதிபதி மலேசியாவிற்கு வருகை

4 ஏப்ரல் 2024, 4:44 AM
இந்தோனேசியா ஜனாதிபதி மலேசியாவிற்கு வருகை

புத்ராஜெயா, ஏப் 4: இன்று இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்தோ மரியாதை நிமித்தமாகப் மலேசியாவுக்கு வருகை புரிந்தார். அவரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

பிரபோவோ தனது ஒருநாள் மலேசிய சிறப்பு பயணத்தின் ஒரு பகுதியாக காலை 9 மணிக்கு பெர்டானா புத்ராவுக்கு வந்தார்.

மேலும், 2024-2029க்கான இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மலேசியாவிற்கு வருகை புரிவது இதுவே முதல் முறை ஆகும்.

நேற்று, பிரபோவோ மற்றும் தூதுக்குழுவை ஏற்றிய சிறப்பு விமானம் இரவு 10.15 மணிக்குச் சுபாங் விமான தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இன்று கோலாலம்பூரில் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டினுடனான ஒரு சந்திப்பிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.