NATIONAL

லாவோஸில் ஆசியான் நிதியமைச்சர்கள் கூட்டம் - மலேசிய பேராளர் குழுவுக்கு அமீர் ஹம்சா தலைமையேற்கிறார்

4 ஏப்ரல் 2024, 2:01 AM
லாவோஸில் ஆசியான் நிதியமைச்சர்கள் கூட்டம் - மலேசிய பேராளர் குழுவுக்கு அமீர் ஹம்சா தலைமையேற்கிறார்

கோலாலம்பூர், ஏப் 4 -  லாவோஸ் நாட்டின் லுவாங் பிரபாங்கில் நேற்று தொடங்கி எதிர்வரும்  வெள்ளிக்கிழமை வரை  நடைபெறும் 28வது ஆசியான் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் மலேசிய பேராளர் குழுவுக்கு  நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தலைமை தாங்குகிறார்.

மலேசிய பேராளர்  குழுவினர் 11 வது ஆசியான் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள் என நிதியமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியது.

பேங்க் நெகாரா கவர்னர் டத்தோ ஷேக் அப்துல் ரஷீட் அப்துல் கஃபூரும்  இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஆசியான் உள்கட்டமைப்பு நிதி, காப்பீட்டு ஒத்துழைப்பு, ஆசியான் பேரிடர் அபாய நிதி மற்றும் காப்பீடு, ஏயன் ஒற்றை சாளரம், காப்பீட்டு ஒழுங்குமுறை, பணமோசடி,  பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், மற்றும் ஆசியான் மன்றம் போன்ற நிதி ஒத்துழைப்புத் துறைகளின் மேம்பாடுகள் குறித்து விவாதிப்பது மற்றும் பரிசீலிப்பது ஆகியவை இக்கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் அடங்கும்.

மூலதனக் கணக்கின் தாராளமயமாக்கல், மூலதனச் சந்தை மேம்பாடு, நிதிச் சேவைகள் தாராளமயமாக்கல், வங்கி ஒருங்கிணைப்பு, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள், நிதிச் சேர்க்கை, ஆசியானில் நிதியியல் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கான சாலை வரைபடத்தின் கண்காணிப்பு கூட்டங்களில் அமீர் ஹம்சா  பங்கேற்பார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.