NATIONAL

கே.கே.மார்ட் நிறுவனர் பேரரசரை சந்தித்தார்- காலுறை விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்

3 ஏப்ரல் 2024, 8:29 AM
கே.கே.மார்ட் நிறுவனர் பேரரசரை சந்தித்தார்- காலுறை விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர், ஏப் 3 - கே.கே.சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாய் கீ கான் மாட்சிமை தங்கிய பேரரசர் சுலதான் இப்ராஹிமை  இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

அந்த 15 திமிட சந்திப்பின்போது, தனது  கடையில் அல்லா பெயரைக் கொண்ட காலுறைகள் விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேரரசரிடமும்   அனைத்து முஸ்லிம்களிடமும் சாய் மன்னிப்பு கோரியதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல்  பக்கத்தில் வெளியிடப்பட்ட  ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதி செய்ய

விற்கப்படும் பொருட்கள், குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் குறித்து கே.கே.மார்ட் உட்பட அனைத்து தரப்பினரும்   மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

அனைத்து தரப்பினரும்  அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.  இதுவே எனது கடைசி நிறைவூட்டலாக இருக்கும் என  நான் நம்புகிறேன், என்று சுல்தான் இப்ராஹிம் அரச பத்திரிகை அலுவலகத்திடம கூறினார்.

எந்தவொரு தரப்பினரும் பிறரை தூண்டிவிடுவது உள்ளிட்ட நோக்கங்களுக்கு  இந்த விவகாரத்தை  தஙகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்சனை நீடிப்பதைக் காண நான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.