NATIONAL

ஐடில்பித்ரி பண்டிகையை முன்னிட்டு கூட்டரசு  சாலைகளில் வேக வரம்பு குறைக்கப்படும்

2 ஏப்ரல் 2024, 10:19 AM
ஐடில்பித்ரி பண்டிகையை முன்னிட்டு கூட்டரசு  சாலைகளில் வேக வரம்பு குறைக்கப்படும்

கோலாலம்பூர், ஏப் 2: ஐடில்பித்ரி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும்  உள்ள கூட்டரசு சாலைகளில்   ஏப்ரல் 8 முதல் 14 வரை வேக வரம்பு மணிக்கு 10 கிலோ மீட்டர் (கி.மீ./மணி) குறைக்கப்படும்.

அக்காலக்கட்டத்தில் கூட்டரசு சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 90 கிமீக்குப் பதிலாக 80 கிமீ ஆக குறைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சகம் (கேகேஆர்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

பண்டிகைக் காலங்களில் சாலை விபத்துகளின் தரவுகளின் அடிப்படையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு வாரத்திற்கு வேக வரம்பை தற்காலிகமாகக் குறைப்பதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐடில்பித்ரி போது கேகேஆர் ``ஓப்ஸ் பெர்செபாடு`` மற்றும் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேலும், ஏப்ரல் 1 முதல் 17 வரையில் அவசர வேலைகளைத் தவிர, எந்த நெடுஞ்சாலை தடங்களையும்  மேம்பாட்டு மற்றும்   சீரமைப்பு பணிகளுக்கு மூட நிறுவனங்களுக்கு அனுமதியில்லை.

"இது கேகேஆர் தொடங்கிய MyJalan திட்டத்திற்கு இணங்குவதுடன், ஒட்டுமொத்த மக்கள் மற்றும் நாட்டின் அணுகுமுறைக்கு ஏற்ப, பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் வசதியை உறுதிப்படுத்துவதில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.