NATIONAL

அரசு ஊழியர்கள்  நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக வெ.500 பெறுவர்

1 ஏப்ரல் 2024, 6:35 AM
அரசு ஊழியர்கள்  நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக வெ.500 பெறுவர்

புத்ராஜெயா, ஏப் 1 - ஒப்பந்தப் பணியாளர்கள்  உட்பட கிரேட் 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதிமாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தொகை வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறக்கூடிய மற்றும் ஓய்வூதியம் பெறாத படைவீரர்கள் உட்பட அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு 250  வெள்ளி வழங்கப்படும்  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வரும்   ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை   முதல் இந்த  நோன்புப் பெருநாள்  சிறப்பு உதவி நிதியை விநியோகிக்கும்படி  கருவூலத்திற்குத் தெரிவித்துள்ளேன் என்று இன்று இங்கு   நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வில்

உரையாற்றும் போது அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.