NATIONAL

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் அலுவலத்திற்கு நட்மா தலைமை இயக்குனர் சிறப்பு வருகை

1 ஏப்ரல் 2024, 6:20 AM
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் அலுவலத்திற்கு நட்மா தலைமை இயக்குனர் சிறப்பு வருகை

ஷா ஆலம், ஏப் 1: கடந்த வாரம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் அலுவலத்திற்கு நட்மாவின் தலைமை இயக்குனர் சிறப்பு வருகை புரிந்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் (நட்மா) இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் ஷஹரில் பின் இட்ருஸ் மற்றும் சிலாங்கூர் மாநில அரசின் செயலாளர் டத்தோ செத்தியா ஹாஜி ஹாரிஸ் பின் காசிம் அவர்களிடையே இந்த கௌரவ சந்திப்பு நடைபெற்றது.

நட்மா மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை தேவைகள் மற்றும் செயல்படுத்தப் படக்கூடிய பேரிடர் மேலாண்மை மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள் உட்பட்ட விவகாரங்கள்  இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்திற்கும் (SSOC) மற்றும் சிலாங்கூர் மாநிலப் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் சொத்து கண்காட்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் (நட்மா) இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் ஷஹரில் பின் இட்ருஸ் அழைத்துச் செல்லப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.