மாராங், ஏப்ரல் 1: இங்குள்ள கம்போங் புலாவ் கெரெங்காவில் உள்ள காட்டில் காட்டுக் கோழி வேட்டையில் 15 மணி நேரம் காட்டில் சிக்கிய 3 வாலிபர்கள் நேற்று காலை பத்திரமாக பொதுமக்கள் மீட்டனர்.
முகமட் ஆடம் அஜ்மல் ஜைனுடின் (15), முகமது ஹாரிஸ் கமருடின் (15) மற்றும் முகமது அமிருல் ஹசிக் செலமட் (16) ஆகியோர் காலை 8.13 மணியளவில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாலையோரம் கிராம மக்களால் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் கமாண்டர் மராங் ஜுரைடி யூசுப் தெரிவித்தார்.
"அச்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பலவீனமாக இருந்தனர் மற்றும் அவர்களின் உடலில் சிறிய காயங்கள் இருந்தன. அவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப் படுவதற்கு முன்பு சிகிச்சைக்காகக் காங் பலாய் சுகாதாரக் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
சம்பந்தப்பட்ட மூன்று வாலிபர்களும் நேற்று மாலை 4.19 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது மற்றும் மாராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 11 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
– பெர்னாமா


