ECONOMY

'பாடு' தரவுத் தளத்தில் சுமார் ஒரு கோடி பேர் பதிவு

30 மார்ச் 2024, 10:30 AM
'பாடு' தரவுத் தளத்தில் சுமார் ஒரு கோடி பேர் பதிவு

கோலாலம்பூர், மார்ச் 30 - நேற்றைய நிலவரப்படி 3 கோடியே 8  லட்சம் மலேசியர்களில் சுமார் 98 லட்சத்து 20 ஆயிரம்  பேர்  மத்திய தரவுத் தள மையத்தில்  (பாடு)  தங்கள் தகவல்களைப் புதுப்பித்துள்ளனர்.

'பாடு'வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின்படி, சிலாங்கூர் மாநிலம் மிக அதிகமாக  15 லட்சத்து 60 ஆயிரம் பேரை  பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூர் (11 லட்சம் பேர்), பேராக் (9 லட்சத்து 80 ஆயிரம் பேர்), சரவாக் (9 லட்சம் பேர் ), சபா (8.3 லட்சம் பேர் ),  கெடா (7.6 லட்சம் பேர் ) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கிளந்தானில் 6.7 லட்சம் பேரும்  கோலாலம்பூரில் 5.7 லட்சம் பேரும் பினாங்கில் 5.6 லட்சம் பேரும் பகாங்கில் 5.5 லட்சம் பேரும் திரங்கானுவில் 4.6 லட்சம் பேரும் நெகிரி செம்பிலானில் 4.2  லட்சம் பேரும்  மலாக்காவில் 3 லட்சம் பேரும்  புத்ராஜெயாவில்  30 ஆயிரம் பேரும்  லபுவானில் 20 ஆயிரம் பேரும் பதிவு செய்துள்ளனர்.

தங்கள் தரவை புதுப்பிக்காதவர்கள், நாளை (மார்ச் 31) தேதிக்கு முன், https://www.padu.gov.my  என் அகப்பக்கத்தில் அல்லது அருகிலுள்ள பாடு முகப்பிடத்தில் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.