NATIONAL

"மேஜிக் மஷ்ரூம்" வகை வேப் புகையால் 10 இளைஞர்கள் உயிரிழப்பா ? 

26 மார்ச் 2024, 4:11 AM
"மேஜிக் மஷ்ரூம்" வகை வேப் புகையால் 10 இளைஞர்கள் உயிரிழப்பா ? 

ஷா ஆலம், மார்ச் 26: தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் எலக்ட்ரானிக் சிகரெட் அல்லது "மேஜிக் மஷ்ரூம்" வகை வேப் புகையால் 10 இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, செல்லுபடியாகாத தகவல்களை  தொடர்ந்து பரப்பப்பட்டால், சமூகத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என்று கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரம்லி காசா கூறினார்,

“காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறார்கள், அது உண்மையல்ல.

"சமூக ஊடக பயனர்கள் சமூக வலைத்தளத்தை சரியாகப் பயன்படுத்த நினைவூட்டப்படுகிறார்கள், காரணம் தவறான உள்ளடக்கத்தைப் பரப்புவது பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்" என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே எலெக்ட்ரானிக் சிகரெட் புகைக்கும் பழக்கத்தின் மீது சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராம்லி அறிவுறுத்தினார்.

கடந்த சனிக்கிழமையன்று, டிக்டாக் கணக்கு மூலம் இரண்டு நபர்களுக்கு இடையிலான நேர்காணலைக் காட்டும் வீடியோ வைரலானது. அதில்  "மேஜிக் மஷ்ரூம்" மாயக் காளான் காரணமாக ஓர் இளைஞன் இறந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் ஏற்பட்ட 10வது மரணம் என்று கூறப்படுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.