NATIONAL

நேற்று வரை பாடு பதிவு 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளது

25 மார்ச் 2024, 8:54 AM
நேற்று வரை பாடு பதிவு 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 25: மார்ச் 17 அன்று 5.4 மில்லியனாக இருந்த பாடு பதிவு நேற்றைய நிலவரப்படி 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனவே, இதுவரை பதிவு செய்யாத பொதுமக்கள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பொருளாதார அமைச்சர் முகமட் ரபிசி ரம்லி அறிவுறுத்தினார்.

"மொத்தப் பதிவிலிருந்து, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பதிவு 35.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

"இந்த எண்ணிக்கை, மார்ச் 31, 2024ல் வரவிருக்கும் காலக்கெடுவுக்குள் 50 சதவீதத்தை எட்டும் அல்லது அதைத் தாண்டும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கப்பட்ட பாடு, தனிநபர் மற்றும் குடும்பத் தகவல்களைப் பதிவு செய்யும் தளமாகும். இதன் மூலம் தகுதியுள்ள குடிமக்களுக்கு மானிய விநியோகத்தைச் செயல்படுத்த முடியும்.

மார்ச் 31 வரை www.padu.gov.my என்ற இணையதளம் மூலம் பாடு அமைப்பில் பதிவு செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.