NATIONAL

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் இறந்துள்ளார்

25 மார்ச் 2024, 8:34 AM
ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் இறந்துள்ளார்

கோலாலம்பூர், மார்ச் 25: இதுவரை ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் (22 வயது) இறந்துள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி மாரான் பகாங்கில் மரணம் நிகழ்ந்ததாக ஊரக மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

"நாம் தீவிர வெப்ப அலைகள் கொண்ட மூன்றாவது நிலையில் இல்லை. ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் படலத்தின் சிதைவு ஆகியவையால் நமது நாடு தீவிர வெப்ப வானிலையை எந்த நேரத்திலும் எதிர்நோக்கலாம்.

"தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மேக விதைப்பு ஏற்படுத்துவது உட்பட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு நடவடிக்கைக்கும் RM100,000 க்கும் குறைவாகவே செலவாகும் மற்றும் அது மேகம் மற்றும் காற்றின் நிலையைப் பொறுத்தது என்று மேக விதைப்பு செலவு தொடர்பாகப் பதிலளித்த அஹ்மட் ஜாஹிட் இவ்வாறு கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.