NATIONAL

வங்கித் தகவல்களைச் சிண்டிகேட்டிடம் வழங்கிய  80 நபர்கள் கைது

25 மார்ச் 2024, 8:32 AM
வங்கித் தகவல்களைச் சிண்டிகேட்டிடம் வழங்கிய  80 நபர்கள் கைது

சிபு, மார்ச் 25: சிபுவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மோசடி நோக்கத்தில் வங்கித் தகவல்களைத் சிண்டிகேட்டிடம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 80 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி கூறினார்.

"அங்கீகரிக்கப்படாத தரப்பினரிடம் வங்கி கணக்குகளை ஒப்படைப்பது சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், குற்றவாளிகளுக்கு குற்றச் செயல்களைப் புரிய வாய்ப்பளிக்கிறது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இணைய மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளில் சமூக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றார்.

மேலும், கவனமாக இருக்குமாறும், தனிப்பட்ட வங்கி கணக்குத் தகவல்களை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.