கோலாலம்பூர், மார்ச் 25: தலைநகரில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் லஞ்சம் வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூத்தக் காவல்துறை அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
ஆதாரங்களின்படி, கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் கடமையாற்றும் மூத்த அதிகாரி நேற்று புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் சாட்சியமளிக்க வந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்குச் சொந்தமான பல இடங்களில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வின் மூலம் ரிங்கிட் 2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.
"சந்தேக நபர் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கியைப் பெர்னாமா தொடர்பு கொண்டபோது குறிப்பிட்ட அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
- பெர்னாமா




