ECONOMY

பள்ளி கட்டிடத்திலிருந்து  விழுந்த மாணவி ஒருவர் உயிரிழந்தார்

23 மார்ச் 2024, 5:23 AM
பள்ளி கட்டிடத்திலிருந்து  விழுந்த மாணவி ஒருவர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், மார்ச் 23: இங்கு அருகில் உள்ள சுங்கை பூலோவில், நான்கு படிவ மாணவி பள்ளி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஹபீஸ் முஹம்மது கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தனது தரப்பிற்கு காலை 11.26 மணிக்கு அறிக்கை கிடைத்தது.

“மாணவியின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டது, மேலும் பிரேத பரிசோதனை முடிவுகளில் உயரமான இடத்தில் இருந்து விழுந்ததன் விளைவாக தலையில் ஏற்பட்ட காயங்கள்தான் மரணத்திற்கு காரணம்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் முகமட் ஹபீஸ் கூறினார்.

"பொதுமக்கள், குறிப்பாக சமூக ஊடக பயனர்கள், எரிச்சலூட்டும் அல்லது பொது ஒழுங்குக்கு  குந்தகமான உள்ளடக்கத்தை பரப்ப வேண்டாம்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.