ECONOMY

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் பாதுகாக்கப்படும்! பாப்பாராய்டு உத்தரவாதம்

21 மார்ச் 2024, 8:53 AM
சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் பாதுகாக்கப்படும்! பாப்பாராய்டு உத்தரவாதம்

பாங்கி, மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள  அனைத்து தமிழ்ப் பள்ளிகளும்  முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சிலாங்கூர் மாநில அரசின் இலக்காக உள்ளது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மிகவும் அவசியம். இதை மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று பாங்கி தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பாங்கி இந்து மயான பராமரிப்பு தலைவர் மகேந்திரன் முனியாண்டி, பாங்கி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் பன்னீர் செல்வம், பாங்கி தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுகுமாறன், கவுன்சிலர் பாலமுரளி, தியாகராஜன், டத்தோ ஜெகா, டாக்டர் ஜோக்கிம் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.