NATIONAL

சிறப்பு நிதி உதவி ரிங்கிட் 700 தொடர்பான சுவரொட்டி போலியானது

20 மார்ச் 2024, 4:08 AM
சிறப்பு நிதி உதவி ரிங்கிட் 700 தொடர்பான சுவரொட்டி போலியானது

கோலாலம்பூர், மார்ச் 20: நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் 2024 ம் ஆண்டுக்கான சிறப்பு நிதி உதவி ரிங்கிட் 700 தொடர்பான சுவரொட்டி போலியானது என்று பொதுச் சேவைத் துறை (ஜேபிஏ) வலியுறுத்தியுள்ளது.

"சுவரொட்டியில் உள்ள தகவல்கள் தவறானவை. 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சுவரொட்டி மாற்றியமைக்கப்பட்டது" என்று முகநூல் மூலம் ஜேபிஏ தெரிவித்துள்ளது.

இது சுவரொட்டியின் கீழ் வலது புறத்தில் டிசம்பர் 2022 இல் UKK (கார்ப்பரேட் கம்யூனிகேஷன் யூனிட்) ஜேபிஏஆல் தயாரிக்கப்பட்ட விளக்கப் படத்தைக் காட்டுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி உதவித்தொகை வழங்கப்படும் என போலி சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.