NATIONAL

தேசியக் குடும்பக் கடன் விகிதம் RM1.53 டிரில்லியனை எட்டியுள்ளது

19 மார்ச் 2024, 7:44 AM
தேசியக் குடும்பக் கடன் விகிதம் RM1.53 டிரில்லியனை எட்டியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 19: தேசியக் குடும்பக் கடன் விகிதம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் RM1.53 டிரில்லியனை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலானவை வீடு மற்றும் வாகனக் கடன்களை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பு 2020 மற்றும் 2022க்கு இடையில் மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கான விற்பனை மற்றும் சேவை வரி சலுகைகளால் உந்தப்பட்டதாகப் பெரிட்டா ஹரியான் தெரிவித்துள்ளது.

கடனின் மிகப்பெரிய பங்கு 60.5 சதவீதம் வீட்டுக் கடன்களாகும், அதைத் தொடர்ந்து வாகனக் கடன்கள் (13.2 சதவீதம்) மற்றும் தனிநபர் நிதியுதவி (12.6 சதவீதம்) ஆகும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"குடியிருப்பு அல்லாத சொத்து, கிரெடிட் கார்டு கடன், பத்திரங்கள் போன்ற பிற விஷயங்களுக்கான கடன்களும் இதில் அடங்கும்," என்று அவர் போர்டல் மூலம் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் மொத்த தேசியக் குடும்பக் கடன் RM1.19 டிரில்லியன், RM1.25 டிரில்லியன் (2019), RM1.32 டிரில்லியன் (2020), RM1.38 டிரில்லியன் (2021) மற்றும் RM1.45 டிரில்லியன் (2022) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2018ல் இருந்த 82 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வீட்டுக் கடன் விகிதம் 84.2 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.