கோலாலம்பூர், மார்ச் 19 - பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளுடன் மலேசியாவின் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், மலேசியன் வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு கழகம் (Matrade) பாரிஸில் உள்ள மலேசிய வர்த்தக ஆணையர் அலுவலகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த சந்தை மெட்ரேட் பாரிஸின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் கூறினார்.
"சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் மலேசியா தீவிரமாக உள்ளது," என்று அவர் தனது X கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
மேலும், 2023 இல், 3.41 பில்லியன் யூரோக்கள் (RM17.5 பில்லியன்) இருதரப்பு வர்த்தகத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் மலேசியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகப் பிரான்ஸ் உருவானது.
"Matrade Paris அலுவலகத்தின் விரிவாக்கம், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை மலேசிய நிறுவனங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்," என அவர் கூறினார்.
- பெர்னாமா




