சிப்பாங், மார்ச் 19 - இஸ்ரேலை சேர்ந்த ஜிம் என்ற நிறுவனத்தின் சின்னம் கொண்ட கொள்கலன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலையை அடைவற்கு தவறுதலாக அனுமதித்த துறைமுக நடத்துநருக்கு போக்குவரத்து அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிம் சின்னம் கொண்ட அனைத்து கொள்கலன்களும் துறைமுகங்களை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அவை சொந்த நாட்டிற்கு அல்லது பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அமைச்சு முன்பு அறிவுறுத்தியிருந்தது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
துறைமுக நடத்துநர் இந்த கொள்கலனை வெளியேறுவதற்கு தவறுதலாக அனுமதித்ததாக எங்களுக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது, எனவே அந்த துறைமுகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டித்தோம்.
எங்கள் துறைமுகங்களிலிருந்து (நாட்டிற்குள்) இந்த கொள்கலன்கள் வெளியேறுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்பதோடு ஏற்கனவே உள்ள கொள்கலன்களையும் விரைவில் அகற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துளளோம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையிலான செயல்பாட்டு ஒப்பந்தம் மற்றும் நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த மார்ச் 16ஆம் தேதியன்று நாட்டிலுள்ள நெடுஞ்சாலையில் ஜிம் கொள்கலனை ஏற்றிய லாரி பயணிப்பதை சித்தரிக்கும் வீடியோ ஒன்று வைரலானது தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது போன்றச் சம்பவம் மீண்டும் நடக்காது. இந்த பெயரைக் கொண்ட இன்னும் நான்கு அல்லது ஐந்து கொள்கலன்கள் மட்டுமே எங்களிடம் உள்ளன (அவை நாட்டிலிருந்து அகற்றப்படும்). துரதிருஷ்டவசமா
இஸ்ரேலியக் கொடியுடன் நாட்டிற்குள் நுழையும் கப்பல்களை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்தவும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்வதைத் தடை செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.




