NATIONAL

 பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் கால்பந்து போட்டி டிக்கெட்டுகள், சிலாங்கூர் எஃப்சி விற்பனைக்கான வவுச்சர்களைப் பெற வாய்ப்பு

19 மார்ச் 2024, 2:21 AM
 பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் கால்பந்து போட்டி டிக்கெட்டுகள், சிலாங்கூர் எஃப்சி விற்பனைக்கான வவுச்சர்களைப் பெற வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 19: ரம்ஜான் மாதம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் கால்பந்து போட்டி டிக்கெட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வச் சிலாங்கூர் எஃப்சி விற்பனைக்கான வவுச்சர்களை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்ஜான் பஜார்களில் இந்த திட்டத்தை மேற்கொள்வதாகத் ஷா ஆலம் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவுத் துறை தெரிவித்தது.

"அவை ரம்ஜான் பஜார் செக்‌ஷன் 13 (ஷா ஆலம் ஸ்டேடியம்), செக்‌ஷன் 19 மற்றும் செக்‌ஷன் 17 ஆகும்.

"இந்த திட்டம் சிலாங்கூர் கால்பந்து சங்கம் (FAS) மற்றும் கழிவு எண்ணெய் கையாளும் நிறுவனமான ``Fathopes Energy`` ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதில் 7வது, 14வது மற்றும் 21வது நாட்களில் சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும். மேலும் பெரும்பாலான சேகரிப்பாளர்கள் சிலாங்கூர் எஃப்சி 2024/2025 சீசன் பாஸைப் பெறும் வாய்ப்பைப் பெறுவர்.

வெகுமதிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அதாவது 1 முதல் 5 கிலோகிராம் (கிலோ) எடையுள்ள எண்ணெய்க்கான சிவப்பு வெகுமதிகள் மற்றும் 6 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள எண்ணெய்க்கான மஞ்சள் வெகுமதிகள் ஆகும்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு ரம்ஜான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.