NATIONAL

காணாமல் போன 16 வயது இளம் பெண்ணைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

18 மார்ச் 2024, 7:03 AM
காணாமல் போன 16 வயது இளம் பெண்ணைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

ஜோகூர் பாரு, மார்ச் 18: மார்ச் 5 முதல் தெமெங்கோங் ஸ்ரீ மகாராஜா கூலாய் மருத்துவமனை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 16 வயது இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நூருல் ஐனா நஜ்வா அப்துல் ஃபத்தாவைக் கடைசியாக நள்ளிரவு 12.30 மணியளவில் அவரின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் பார்த்ததாகக் கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் தான் செங் லீ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதே நாள் மாலை 7 மணிக்கு    போலிஸ் புகார்  செய்யப்பட்டது. .

சதைப்பற்றுள்ள உடலும், கண்ணாடியும் அணிந்திருந்த அப்பெண் சாலேங்கில் உள்ள ஒரு மட்ரஸாவின் மாணவர் என்றும், அவரது தந்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும், அவரது சித்தி டியூஷன் ஆசிரியராகவும் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அப்பெண் கடைசியாக அணிந்திருந்த ஆடை என்ன என்பது குறித்து இருவருக்கும் தெரியவில்லை.

“இதுவரை விசாரணைக்கு உதவுவதற்காக இளம்பெண்ணின் மாற்றாந்தாயின் உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

"கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பெண் பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார்," என தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த பொதுமக்கள்,  கூலாய் காவல் நிலையத்தை 07-6632222 என்ற எண்ணில் அல்லது புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் தியோ ஃபெங் ஷுனை 018-3774339 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.