NATIONAL

மலேசியாவில்  அந்நிய முதலீடுகள் அதிகரித்து, பொருளாதாரம் வலுப்பெறுகிறது  - பிரதமர்

18 மார்ச் 2024, 5:04 AM
மலேசியாவில்  அந்நிய முதலீடுகள் அதிகரித்து, பொருளாதாரம் வலுப்பெறுகிறது   - பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 18: மலேசியாவை ஒரு முக்கிய முதலீட்டு மற்றும் மூலதன மையமாகப் பார்க்க சர்வதேச முதலீட்டு சமூகத்திற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த இன்வெஸ்ட் ஆசியான் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அவர், மலேசியப் பொருளாதாரம் பற்றிய வலுவான நம்பிக்கையின் அறிக்கையை உயர்த்திக் காட்டினார். இந்த ஆண்டு அதிக முதலீடு, பொருளாதார செயல்திறன் மற்றும் ரிங்கிட்டுக்கான சிறந்த நிலைபாடுகளை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

மலேசியாவின் பொருளாதாரத்தின் வலுவான மற்றும் மேம்பட்ட அடித்தளங்களை கோடிட்டுக் காட்டும் முக்கிய பொருளாதார குறிகாட்டிகளை முன்வைத்ததோடு, நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது என்றார்.

"மலேசியா, 2023 ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட நேரடி முதலீட்டின் அடிப்படையில் 23 சதவீதம் உயர்ந்து, இதுவரை இல்லாத அளவு RM329.5 பில்லியனை அடைந்தோம்.

"2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், உறுதியான முதலீடுகள் புதிய திட்டங்கள், அதிக ஊதியம் தரும் புதிய வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவை மக்களுக்குப் பல நன்மைகளை தரும் என அவர் கூறினார்.

அன்வார் மலேசிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மாற்றுத் திட்டத்தைப் பற்றியும் பேசினார், அதே நேரத்தில் இவை அனைத்தும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சிறந்த மற்றும் சாதகமான அரசியல், பொருளாதார  சமூக சூழலை உருவாக்கும் என்பதை வலியுறுத்தினார்.

"மலேசியா மடாணி என்ற தொலைநோக்கு கட்டமைப்பானது, நிதிக் கொள்கை, மானிய சீர்திருத்தம் மற்றும் உயர்நெறி மக்கள் நல்வாழ்வு  ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மறையான, ஆனால் தனியார் பொருளாதார பங்கேற்பாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்குக் கூடுதலாக முன்னெடுக்கப்படும்  மாற்றங்களை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான மற்றும் ஆழமான அரசாங்கத் திட்டமாகும்.

"எங்கள் மடாணி மாற்றுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத் தூண்கள் உள்ளன: இது 21 ஆம் நூற்றாண்டின் நிலையான மற்றும் மிகவும் வளமான பொருளாதாரம் மாற்றத்தை ஆதரிக்கும்" என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.