ECONOMY

நேப்பாளியின் சடலம் ஆற்றில் மிதந்தது

17 மார்ச் 2024, 7:33 AM
நேப்பாளியின் சடலம் ஆற்றில் மிதந்தது

ஷா ஆலம், மார்ச் 17 - நேப்பாளத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஆணின் சடலம், ஷா அலாம் பிரிவு 17 ல் உள்ள சுங்கை கிள்ளான்  வெள்ள கட்டுப்பாடு அணையில் நேற்று மிதந்தது.

ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம்  கூறுகையில், இரவு 11.56 மணியளவில் அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் உடல்  குப்புறக் கிடத்தப்பட்டு முழு உடை அணிந்த நிலையில் கிடந்த சடலம் குறித்து தகவல்  அளித்தனர்.

உடலின் தடயவியல் பரிசோதனையில் அவரது நேப்பாள பாஸ்போர்ட்டின் நகல் கிடைத்ததாகவும், போராட்டமோ அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பிற காயங்களோ இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண உடல் பிரேத பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி முகமட் ஷாருல் பக்ரியை 012-3630512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுவதாகவும் இக்பால் கூறினார்.

— பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.