ஷா ஆலம், மார்ச் 15: ரம்ஜான் பஜாரில் விற்கப்படாத உபரி உணவுகளை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்யும் திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தொடர்கிறது.
நேற்று தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை திங்கள் முதல் வெள்ளி வரை இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முகநூல் மூலம் உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ``MBSA MySave Food @ Bazar`` ரம்ஜான் திட்டமானது ஷா ஆலம் ஸ்டேடியம் பிரிவு 13, பிரிவு 17 மற்றும் பிரிவு 19 ஆகிய மூன்று பஜார்களை உள்ளடக்கியது என்று அவர் விளக்கினார்.
"சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள பஜார் வியாபாரிகள் விற்கப்படாத உபரி உணவுகளை ``MBSA MySave Food`` கூடாரங்களுக்கு அனுப்பலாம்.
கொடுக்கப்படும் உணவு, தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
கடந்த ஆண்டு முதல் ரம்ஜான் பஜாரில் உணவு வீணடிக்க படுதல் தடுக்க MySave Food @ Bazar ரம்ஜான் திட்டத்தை எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்தது
கடந்த ஆண்டு, எம்பிஎஸ்ஏ திட்டத்தின் 14 நாட்களில் 2,958.6 கிலோ உபரி உணவு மற்றும் பானங்களை சேகரித்துள்ளது.




