NATIONAL

தேசிய வகை சைபர் ஜெயா பள்ளியில் அதிக மாணவர்களின் எண்ணிக்கை பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்

15 மார்ச் 2024, 8:19 AM
தேசிய வகை சைபர் ஜெயா பள்ளியில் அதிக மாணவர்களின் எண்ணிக்கை பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்

புத்ராஜெயா, மார்ச் 15 – தேசிய வகை சைபர் ஜெயா பள்ளியில் அதிக மாணவர்களின் எண்ணிக்கை பிரச்சனை, 2028 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தேசிய சைபர் ஜெயா பள்ளி (2) மூலம் தீர்க்கப்படும்.

நீண்ட கால தீர்வாக, 12வது மலேசியா திட்டத்தின் (12MP) கீழ் மூன்றாவது ரோலிங் திட்டத்தில் (RP3) முன்மொழியப்பட்ட அப்புதிய பள்ளியின் கட்டுமானம் அங்கீகரிக்கப்பட்டு தற்போது கொள்முதல் செயல்பாட்டில் உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்தது.

“புதிய பள்ளியில் 36 வகுப்பறைகள் மற்றும் கட்டுமானப் பணியை விரைவுபடுத்தும் வகையில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானக் கருத்தின்படி இதர வசதிகள் இருக்கும். இப்பள்ளி 2028ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ”என்று கல்வி அமைச்சு இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, குறுகிய கால தீர்வாகத் தற்போதுள்ள சைபர் ஜெயா பள்ளியின் ஒன்றாம் ஆண்டு மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது மற்றும் 12 கூடுதல் வகுப்பறை அறைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் ஆகியவை அதில் அடங்கும்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.