NATIONAL

மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நடெல்லாவுடன் அமைச்சர் சஃப்ரூல் சந்திப்பு

15 மார்ச் 2024, 8:08 AM
மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நடெல்லாவுடன் அமைச்சர் சஃப்ரூல் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 15 – மலேசியாவை ஆசியாவின் இலக்கவியல்  மையமாக மாற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  தெங்கு டத்தோஸ்ரீ சஃப்ரூல் அப்துல் அஜீஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான சத்யா நாடெல்லாவுடன்  சந்திப்பு நடத்தவுள்ளார்.

"கெக்கால் பெர்சாமா மலேசியா' முன்னெடுப்பின் வழி  மலேசியா மற்றும் மைக்ரோசாப்ட் இடையேயான ஒத்துழைப்பின் வாயிலாக நமது நாட்டை ஆசியானின் இலக்கவியல் மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெங்கு சஃப்ரூல் இன்று தனது  எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக  சத்யா விரைவில் நாட்டிற்கு வருகை தருவார் என்றும் அவர் கூறினார்.

ஆசியான் இலக்கவியல்  துறையில் மலேசியாவின் தலைமையை உயர்த்துவதில் மைக்ரோசாப்ட் உடனான நெருக்கமான ஒத்துழைப்பை பெரிதும் எதிர் பார்க்கிறோம் என்று  தெங்கு சஃப்ரூல்  தெரிவித்தார்.

கடந்த 2014 இல் ஸ்டீவ் பால்மருக்குப் பதிலாக மைக்ரோசோப்ட்  தலைமை நிர்வாக அதிகாரியாகவும், 2021 ஆம் ஆண்டு  ஜான் டபிள்யூ. தாம்சனுக்கு பதிலாக அந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும்  சத்யா பதவியேற்றார்.

வரும் மார்ச் 20 அன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்  'மைக்ரோசாப்ட் பில்ட்: ஏஐ டே' நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் புதிய சகாப்தம் குறித்த தொடக்க உரையை சத்யா வழங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.