NATIONAL

தீ விபத்தில் வயதான பெண் மரணம்

15 மார்ச் 2024, 5:03 AM
தீ விபத்தில் வயதான பெண் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 15 - இன்று அதிகாலை USJ4, சிலாங்கூரில் உள்ள இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் கணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அதிகாலை 1.15 மணியளவில் வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் கமாண்டர் ஷம்சுல் ஆபிடின் கூறினார்.

மேலும், அவ்வீடுகள் 60 சதவீதம் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டது.

சுபாங் மற்றும் பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“தீயணைப்புப் படையினரால் அப்பெண் வெற்றிகரமாக மீட்கப்பட்டார், ஆனால் சுகாதாரப் பணியாளர்களால் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று இன்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 1.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஷம்சுல் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.