NATIONAL

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் தேசிய ஆண்கள் இரட்டையர் அணி தோல்வி

14 மார்ச் 2024, 8:11 AM
அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் தேசிய ஆண்கள் இரட்டையர் அணி தோல்வி

கோலாலம்பூர், மார்ச் 14: பர்மிங்காமில் புதன்கிழமை நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில், தேசிய ஆண்கள் இரட்டையர் பிரிவினர் மன் வேய்  சாங்-தீ காய் ஊன் முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினர்.

பர்மிங்காமில் உள்ள யுடிலிடா அரங்கில் நடந்த உலகின் பழமையான பூப்பந்து போட்டியில், 18வது தரவரிசையில் உள்ள இந்த ஜோடி 21-23, 18-21 என்ற கணக்கில் 16 வது தரவரிசையில் உள்ள ஜப்பான் ஜோடியான அகிரா கோகா-தைச்சி சைட்டோவிடம் தோல்வியடைந்தது.

கோகா-சைட்டோ இரண்டாவது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியன்-முகமட் ரியான் ஆர்டியான்டோவை எதிர் கொள்ளவுள்ளனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.