NATIONAL

ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவிற்கும் பகாங் கோ நிறுவனத்திற்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல்

13 மார்ச் 2024, 8:00 AM
ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவிற்கும் பகாங் கோ நிறுவனத்திற்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல்

ஷா ஆலம், மார்ச் 13: கடந்த வாரம், ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவிற்குப் (SSDU) பகாங் கோ (Pahang GO Sdn.Bhd) நிறுவனத்திலிருந்து நான்கு பேர் வருகை புரிந்தனர். இந்நிகழ்வில் பகாங் கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஃபெண்டி பின் முகமட் இசா உட்பட மூன்று அதிகாரிகளும் மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த வருகை இருதரப்பு விவாதங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரம் அல்லது ஸ்மார்ட் மாநிலம் மேம்பாடு பற்றி கலந்துரையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. அதாவது ஸ்மார்ட் நகரம் அல்லது ஸ்மார்ட் மாநிலமாக உருமாறும் எண்ணத்தை அடைய சிலாங்கூர் மாநிலம் செயல்படுத்தும் ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டங்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பற்றி பகாங் கோ அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.

இந்தத் தகவலைப் பகிர்வதன் மூலம், ``SSDU`` மற்றும் Pahang GO ஆகியவை திடமான ஒத்துழைப்பு மூலம் ஒரு ஸ்மார்ட் மாநிலத்தை உருவாக்கும் இலக்கை அடைய தங்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.