NATIONAL

அகில இங்கிலாந்து பூப்பந்து- பியெர்லி-தினா, சூன் ஹூவாட்-ஷேவோன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

13 மார்ச் 2024, 4:46 AM
அகில இங்கிலாந்து பூப்பந்து- பியெர்லி-தினா, சூன் ஹூவாட்-ஷேவோன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

கோலாலம்பூர், மார்ச் 13 - பர்மிங்காமில் நடைபெறும் 2024  ஆண்டு  அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின்  பெண்கள் இரட்டையர் பிரிவில் தேசிய முதல் நிலை ஜோடியான பயெர்லி டான்-எம். தினா மற்றும் தொழில்முறை கலப்பு இரட்டையர்களான கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி ஜோடி நேற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

 யூடிலிடா அரினா பர்மிங்காமில் நடைபெற்ற சூப்பர் 1000 போட்டியில் பியெர்லி-தினா, நாட்டின் மற்றொரு தொழில்முறை இரட்டையர்களான விவியன் ஹூ-லிம் சியூ சென் ஜோடியை  21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் மலேசியாவின்  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர்

இன்று பிற்பகலில்  நடைபெறும் மற்றொரு தொடக்கச் சுற்றில் சீனாவின் முதல் நிலை வீரரான செங் கிங் சென்-ஜியா யி ஃபேன் மற்றும் தைவான் ஜோடியான ஹ்சு யா சிங்-லின் வான் சிங்கை தோற்கடிக்கும் மிகப்பெரிய பொறுப்பு பியெர்லி-தினா  ஜோடிக்கு  காத்திருக்கிறது.

இதற்கிடையில், சூன் ஹுவாட்-ஷெவோன் ஜோடியினர்  தைவானின் கோ-சி சாங்-சிஹ் சென் லீயை 21-17, 26-24 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.