NATIONAL

சுமார் 8,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் பறிமுதல் 

12 மார்ச் 2024, 8:30 AM
சுமார் 8,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் பறிமுதல் 

கங்கார், மார்ச் 12: தாமான் குவார் காஜா,ஆராவ் எனும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று சுமார் 8,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் கண்டுபிடித்து அதன் வியாபாரியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆராவ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால் மாலை 5.30 மணியளவில் 37 வயதுடைய நபர் ஒருவர் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக ஆராவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் மொஹ்சின் முகமட் ரோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உரிமம் இல்லாமல் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பட்டாசுகள் வீட்டின் வரவேற்பறையில் கண்டுபிடிக்கப்பட்டன, என்றார்.

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் உட்பட எட்டு கடந்த கால குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்நபர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றும் வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.