NATIONAL

தீபகற்பம் மற்றும் சபாவில் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை

12 மார்ச் 2024, 7:55 AM
தீபகற்பம் மற்றும் சபாவில் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை

கோலாலம்பூர், மார்ச் 12: அடுத்த ஏழு நாட்களில் தீபகற்பம் மற்றும் சபாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று முகநூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

வானிலை மாதிரி பகுப்பாய்வின் அடிப்படையில் மார்ச் 15 வரை சரவாக்கில் பலத்து காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.met.gov.my என்ற இணையதளத்தையும், MetMalaysia இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தையும் நாடவும். அத்துடன் myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்து சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறவும் பொது மக்களுக்கு அத்துறை அறிவுறுத்துகிறது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.