NATIONAL

வயதான விவசாயி மீது கொலை குற்றச்சாட்டு

12 மார்ச் 2024, 6:36 AM
வயதான விவசாயி மீது கொலை குற்றச்சாட்டு

மஞ்சங், மார்ச் 12: கடந்த வாரம் தனது அண்ணன் மற்றும் அண்ணியைக் கொலை செய்ததாக இன்று ஒரு வயதான விவசாயி மீது (இரண்டு வழக்குகள்) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நுருல் இசலினா ராஜாய் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, 63 வயதான சீ கூய் ஹெங்கிடம் இருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மாலை சுமார் 3 முதல் 3.30 மணியளவில் இங்குள்ள லாட் 3332, முக்கிம் பெங்கலான் பாரு, பந்தாய் ரெமிஸ் என்ற செம்மணை தோட்டத்தில், சீ கோய் சியா (74) மற்றும் கோ எங் லாய் (70) ஆகியோரைக் கொலை செய்த குற்றத்திற்காக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தபட்சம் 12 தடியடிகள் வழங்கப்படும்.

இந்த வழக்கு அடுத்த மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.