NATIONAL

மாமன்னர் மற்றும் பேரரசியார் ரம்ஜான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

12 மார்ச் 2024, 5:01 AM
மாமன்னர் மற்றும் பேரரசியார் ரம்ஜான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

கோலாலம்பூர், மார்ச் 12: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் ரம்ஜான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில், இந்த புனிதமான ரம்ஜான் மாதத்தை முஸ்லிம்கள் தங்கள் மத நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், சக விசுவாசிகளிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியா தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படவும், அச்சுறுத்தல்கள், மற்றும் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படவும், பிரார்த்தனையில் தன்னுடன் சேருமாறு அனைத்து இஸ்லாமியர்களையும் அழைத்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.